Covid19தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று புதிதாக 4410 பேருக்கு கொரோன தொற்று உறுதி…

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸால் 4410 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 5055 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ள நிலையில் 49 பேர் உயிரிழந்துள்னர்.

தமிழகத்தில் தொடர்ந்து 4-வது நாளாக கொரோனா பாதிப்பு 5000-க்கும் கீழ் குறைந்துள்ளது. இன்று ஒரே நாளில் தமிழகத்தில் கொரோனாவால் 4410 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் கொரோனா வைரஸின் மொத்த பாதிப்பு 6,74,802 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனா பாதிப்பிலிருந்து இன்று 5,055 மீண்டு வீடு திரும்பி உள்ள நிலையில் மொத்தம் 6,22,458 கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

கொரோனாவால் 49 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தமிழகத்தில் மொத்தம் 10,472 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இன்று மட்டும் 1148 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.