தமிழ்நாடு

தமிழகத்தில் நாளை முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கம்!

தமிழகத்தில், நாளை முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

கொரோன வைரஸ் அச்சுறுத்தலால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக, மார்ச் மாதம் முதல், தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படவில்லை. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், பொது போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாளை முதல், தமிழகம் முழுவதும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பேசிய அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் அன்பழகன், கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதங்களுக்கு, சாலை வரியில் விலக்கு அளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், போக்குவரத்து அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து நாளை முதல், தமிழ்நாடு உரிமம் பெற்ற ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என கூறிய அவர், மத்திய மாநில அரசுகளின் விதிமுறைகளை பின்பற்றி அனைத்து ஆம்னி பேருந்துகளும் இயக்கப்படும் எனவும் தெரிவித்தார்.