வணிகம்

இன்றைய பங்குச்சந்தை நிலவரம்…

இந்திய பங்குச்சந்தைகள் இன்று சரிவுடன் துவங்கின. மும்பை பங்குச்சந்தை 248.36 புள்ளிகள் சரிந்து, 40,546.38 ஆக வர்த்தகமாகியது. தேசிய பங்குச்சந்தை நிப்டியில் 62.05 புள்ளிகள் சரிவடைந்து 11,909 ஆக வர்த்தகமாகியது.

டெக் மகிந்திராவின் பங்குகள் 2 சதவீதம் சரிவை கண்டன. எச்சிஎல் டெக், டிசிஎஸ், ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் பைனான்ஸ் மற்றும் ஐடிசி ஆகியவை சரிவை சந்தித்தன.அதேநேரத்தில், டாடாஸ்டீல்ஸ், என்டிபிசி, ஏசியன் பெயின்ட்ஸ்,நெஸ்ட்லே இந்தியா மற்றும் பார்தி ஏர்டெல் ஆகியவை லாபத்தை சந்தித்தன.

சர்வதேச சந்தையில் ஏற்பட்ட சரிவுகள் காரணமாக, இங்கும் பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.