கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அமமுக பொருளாளர் வெற்றிவேல் காலமானார்!
அமமுக பொருளாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான வெற்றிவேல் கொரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
கொரோனவால் பாதிக்கப்பட்டிருந்த அமமுக பொருளாளர் வெற்றிவேல் அக்டோபர் 6-ம் தேதி சென்னையில் உள்ள ராமசந்திர மருத்துவமனையில் அனுமதிக்ப்பட்டார். அவரது உடல் நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்ததால் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்
2011 ஆர்.கே. நகர் மற்றும் 2016 பெரம்பூர் தொகுதியில் அதிமுக சார்பில் எம்.எல்.ஏ-வாக தேர்வானார். 2011-ம் ஆண்டு ஆர்.கே.நகரில் ஜெயலலிதா போட்டியிட வேண்டுமென்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
ஜெயலலிதா அவர்களின் மறைவிற்கு பின் சசிகலாவின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் வெற்றிவேல். அதன்பின் அதிமுக-விலிருந்து விலகி தினகரன் உடன் இணைந்தார். அமமுக கட்சியில் பொறுப்பாளர் பதவியில் இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.