அரசியல்தமிழ்நாடு

மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாக மற்றும் செயற்குழுக் கூட்டம் தொடங்கியது…

மக்கள் நீதி மையம் கட்சியின் நிர்வாக மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை பாண்டிபஜார் தனியார் நட்சத்திர விடுதியில் துவங்கி உள்ளது. இந்த கூட்டத்தில் செயற்குழு மற்றும் நிர்வாக குழுவை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் கட்சியின் வெற்றிக்கான இலக்கு மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது.

தேர்தல் நிதியை வலுப்படுத்துவதற்கான வழிவகைகள், கட்சியின் வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் என கட்சியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிறப்பு கிராம சபை கூட்டத்தை விரைந்து நடத்த வைப்பதற்கான வழிவகை குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது எனக் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.