பிரசவம் பார்த்த மருத்துவரின் மாஸ்க்கை இழுக்கும் பச்சிளம் குழந்தை : வைரல் புகைப்படம்
கொரோனா பெருந்தொற்று காரணமாக பல நாடுகளில் பொது இடங்களில் செல்லும் போது மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிறந்த குழந்தை பிரசவம் பார்த்த மருத்துவரின் மாஸ்க்கை கழட்டிய செயல் இணையத்தில் நெகிழ்ச்சியையும் மக்களிடையே ஒரு விதமான நம்பிக்கையும் ஏற்படுத்தியுள்ளது.
துபாயில் பிறந்த குழந்தை ஒன்று பிரசவம் பார்த்த மருத்துவரின் மாஸ்க்கை கழட்டும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது . துபாயை சேர்ந்த மகளிர் சிறப்பு மருத்துவர் சமீர் செயிப். இவர் பிரசவம் பார்த்த பெண்ணுக்கு பிறந்த குழந்தையை தனது கைகளால் தூக்கியுள்ளார். அப்போது மருத்துவரின் முகத்தில் இருந்த மாஸ்க்கை தனது கைகளால் குழந்தை அகற்றியுள்ளது. இந்த புகைப்படத்தை தனது முகநூல், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட மருத்துவர் அனைவரும் மாஸ்க்கிற்கு விடை கொடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை எனும் கேப்சனோடு பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பல நாடுகளில் பொது இடங்களில் செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிறந்த குழந்தை பிரசவம் பார்த்த மருத்துவரின் மாஸ்க்கை கழட்டிய செயல் இணையத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.