தமிழ்நாடு

வங்க கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகக்கூடும் – வானிலை ஆய்வு மையம்

வங்க கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

இதுகுறித்து பேசிய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் புவியரசன், வருகிற 19-ஆம் தேதி வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்க கூடும் என தெரிவித்தார் .

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 14 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடுமென குறிப்பிட்டார்.மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறினார்.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யகூடும் என்று கூறினார்.

அந்தமான், மத்திய கிழக்கு, மேற்கு, வங்க கடல் பரப்பில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாமென வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.