ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவாக பிரசாரத்தில் களமிறங்க உள்ளார் பராக் ஒபாமா!…
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் மற்றும் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட முன்னாள் அதிபர் பராக் ஒபாமா முடிவு செய்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக டொனால்டு டிரம்பும், துணை அதிபராக மைக் பென்ஸும் போட்டியிடுகின்றனர்.
இவர்களுக்கு எதிராக ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக ஜோ பிடனும், துணை அதிபராக கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனர்.
அதிபர் தேர்தலையொட்டி இருதரப்பு அதிபர் வேட்பாளர்களிடையேயும் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் மைக் பென்ஸுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளதாக கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. அதிபர் டிரப்பை விட 8.9 சதவிகிதம் முன்னிலையில் இருப்பதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து வரும் திங்கள் கிழமை முதல் ஜனநாயகக் கட்சி துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸும் பிரசாரத்தை தொடங்கவுள்ளார்.
இந்நிலையில் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் மற்றும் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதாக முன்னாள் அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
பென்சில்வேனியாவில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பிடனுக்காக பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபர் ஒருவர் மற்றொரு வேட்பாளருக்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.