அதிபர் வேட்பாளர் ஜோ பிடனின் பிரசார குழுவுக்கு கொரோனா!…
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோ பிடனின் பிரசார குழுவில், மூன்று பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடனின் பிரசார குழுவில், மூன்று பேர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இருவர், துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிசுடன், நெருங்கிய தொடர்பில் இருந்து உள்ளனர்.
கொரோனாவிலிருந்து மீண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், முக கவசம் அணியாமல் பிரசாரத்தில் பங்கேற்றார். இதை, கமலா ஹாரிஸ் விமர்சித்தார். இந்நிலையில், ஜோ பிடன் பிரசார குழுவினருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறித்து, டிரம்ப் கூறுகையில்,”கமலா ஹாரிஸ், கொரோனாவால் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். அவருக்காக பிரார்த்திக்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார் .