நாட்டில் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து விரைவாக கிடைக்கும் வகையில் உறுதி செய்ய வேண்டும் – பிரதமர் மோடி
நாட்டில் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து விரைவாக கிடைக்கும் வகையில் உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டு உள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு சூழ்நிலை, தடுப்பு மருந்து வினியோகம் மற்றும் நிர்வகித்தல் ஆகியவற்றுக்கு தயாராகுதல் உள்ளிட்டவை பற்றிய ஆய்வு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடந்தது.
இதில் பேசிய பிரதமர் மோடி, அண்டை நாடுகளுக்கு மட்டும் தடுப்பு மருந்து கிடைக்க செய்யும் வகையில் நம்முடைய முயற்சிகளை நாம் நிறுத்தி விட கூடாது என்றார்.
தடுப்பு மருந்துகள், சிகிச்சைக்கான மருந்துகள் மற்றும் மருந்து வினியோக நடைமுறை ஆகியவற்றுக்கான ஐ.டி. தளம் ஆகியவற்றை உலக நாடுகள் முழுவதும் கிடைக்கும்படி செய்ய வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.
கொரோனா தடுப்பு மருந்து விரைவாக கிடைக்கும் வகையில் அதனை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.