தமிழ்நாடு

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடுமென கூறப்பட்டுள்ளது.

திருவள்ளூர்,காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தமான், மத்திய கிழக்கு, மத்திய மேற்கு வங்க கடல், ஆந்திர கடல் பரப்பில் சூறாவளி காற்று வீசுவதால் அடுத்த மூன்று நாட்களுக்கு அங்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.