Covid19இந்தியா

இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 75 லட்சத்தை நெருங்கியது!..

இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 75 லட்சத்தை நெருங்கியுள்ளது.

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 61,871 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் ஆயிரத்து 33 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 74 லட்சத்து 94 ஆயிரத்து 552ஆகவும், பலி எண்ணிக்கை ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 31ஆகவும் அதிகரித்துள்ளது.

கொரோனாவிலிருந்து குணமானோர் எண்ணிக்கை 65 லட்சத்து 97 ஆயிரத்து 210ஆக உயர்ந்துள்ள நிலையில், மேலும் 7 லட்சத்து 83 ஆயிரத்து 311 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1 லட்சத்து 85 ஆயிரத்து 750 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.