தமிழ்நாடு

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பிற மாவட்டங்களில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதியில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் மத்திய வங்க கடலில், நாளை, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு வங்க கடல் அதனை ஒட்டிய ஆந்திர கடலோர மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.