Covid19இந்தியா

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 55,722 பேருக்கு கரோனா தொற்று உறுதி!

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: கடந்த 24 மணி நேரத்தில் 55,722 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . இதனால் மொத்த கரோனா பாதிப்பு 75,50,273-ஆக அதிகரித்தது.

கரோனாவால் மேலும் 579 போ் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு 1,14,610-ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவிலிருந்து 66,399 பேர் மீண்டுள்ளனர்.

இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 66,63,608ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்றுடன் இருப்போா் எண்ணிக்கை தொடா்ந்து மூன்றாவது நாளாக 8 லட்சத்துக்கு குறைவாக உள்ளது. இன்று காலை நிலவரப்படி 7,72,055 போ் கரோனா தொற்றுடன் உள்ளனா்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி அக்டோபா் 18-ஆம் தேதி வரை 9,50,83,976 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், நேற்று மட்டும் 8,59,786 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

வோ்ல்டோமீட்டா் தகவல்படி அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் கரோனா தொற்றுடன் இருப்போா் எண்ணிக்கை அதிகம் உள்ளது. அதே நேரத்தில் கரோனாவில் இருந்து மீண்டவா்கள் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்திலும், கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கையில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்தபடியாக 3-ஆவது இடத்திலும் இந்தியா உள்ளது.