அரசியல்தமிழ்நாடு

தஞ்சாவூரில் அம்மா நகரும் நியாயவிலைக்கடையிணை அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் திரு ஆர். வைத்திலிங்கம் தொடங்கி வைத்தார் .

தஞ்சாவூரில் இன்று அம்மா நகரும் நியாயவிலைக்கடையிணை மாநிலங்களவை உறுப்பினரும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான திரு ஆர். வைத்திலிங்கம், மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆயிரம் மூட்டைக்கு அதிகமாக கொள்முதல் செய்யப்படும்.

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளின் வசதிக்காக கூடுதலாக நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும்,என்றும் விவசாயிகளின் நலன் கருதி நெல் கொள்முதலை துரிதப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது ,
எனவும் நெல் கொள்முதலில் தவறு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார் .

மேலும் பேசிய அவர் மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம் பெறுவதைப் பற்றி தலைமையில் எந்த முடிவும் இது வரை எடுக்கவில்லை என தெரிவித்தார்