இந்தியா

ஒரே மாதத்தில் மூன்றாவது முறையாக லடாக்கில் நிலநடுக்கம்…

லடாக் யூனியன் பிரதேசத்தில் இன்று அதிகாலை 4:44 மணிக்கு லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 3.6 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் வீடுகள் அதிர்ந்ததால் மக்கள் பீதி அடைந்தனர். அதேபோல்,சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

இந்த மாதத்தில் மூன்றாவது முறையாக லடாக்கில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. லடாக்கில் அடுத்தடுத்து ஏற்படும் நிலநடுக்கம் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.