உலகம்சினிமா

பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் மற்றும் அவரது குடும்பத்துடன் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் சந்திப்பு

பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் மற்றும் அவரது குடும்பத்தை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் நேரில் சந்தித்து உரையாடினார் .

அமெரிக்காவில் இருசக்கர வாகனத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜக்கி வாசுதேவ், சமூக வலைதளங்களில் தன்னை பின்தொடரும் பிரபலங்களில் ஒருவரான நடிகர் வில் ஸ்மித்தை அவரது வீட்டில் சந்தித்தார்.

அப்போது, எடுக்கப்பட்ட வீடியோக்களை தொகுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜக்கி வாசுதேவ் பதிவிட்டுள்ளார். அதில், இயந்திர வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட ஆன்மீக நபரை சந்தித்தது மகிழ்ச்சியளிப்பதாக வில் ஸ்மித் தெரிவித்தார்.