உலக அளவில் மின்சார வாகனங்களை அதிக உற்பத்தி செய்யும் மையமாக 5 ஆண்டுகளில் இந்தியா உருவெடுக்கும் – நிதின் கட்கரி
உலக அளவில் மின்சார வாகனங்களை அதிகம் உற்பத்தி செய்யும் மையமாக அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா உருவெடுக்கும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இன்று காணொலி வாயிலாக நடைபெற்ற சுதேசி ஜாக்ரன் மன்ச் நிகழ்ச்சியில் பேசிய அவர், உள்நாட்டு தயாரிப்பு பொருள்களை இந்தியர்கள் அதிகம் பயன்படுத்த வேண்டுமெனவும், வெளிநாடுகளில் இருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிக்கு முடிவு கட்டிவிட்டு, இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கான மாற்று பொருள்கள் பயன்பாட்டை ஊக்குவித்து ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இந்தியாவில் வாகனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளும் தற்போது சுயசார்பு கொண்டவைகளாக உருவாகி வருவதாகவும் நிதின் கட்கரி குறிப்பிட்டார்.