தமிழக முதலமைச்சரின் தாயார் மறைவுக்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார் மு.க.ஸ்டாலின்…
தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே .பழனிசாமி அவர்கள் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி அவர்களின் தாயாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.
சென்னை பசுமைவழிச்சாலையில், தமிழக முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு சென்ற மு.க.ஸ்டாலின், அங்கு, எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் உரையாடிய மு.க.ஸ்டாலின், அவரது தாயார் மறைவு குறித்து விசாரித்தார். அப்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர் .
முன்னதாக, அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் என பலரும் முதலமைச்சர் இல்லத்திற்கு சென்று அவரது தாயார் படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.