வணிகம்

(20-10-2020) இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று செவ்வாய்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 312 குறைந்து ரூ. 37,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 43 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்து, தற்போது ஏற்ற, இறக்க நிலையில் இருந்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் சனிக்கிழமை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ. 1,464 குறைந்து, ரூ.37,440-க்கு விற்பனையானது. தொடர்ந்து நேற்று தங்கத்தின் விலை சற்று அதிகரித்த நிலையில் இன்று மீண்டும் குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ. 312 குறைந்து ரூ. 37,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 39 குறைந்து ரூ. 4,670-க்கு விற்பனை ஆகிறது.

அதேபோன்று நேற்றைய விலையை ஒப்பிடுகையில் ஒரு கிராம் வெள்ளி 60 காசுகள் குறைந்து இன்று ரூ. 66.10 -க்கும், கட்டி வெள்ளி கிலோ ரூ.66,100-க்கும் விற்பனை ஆகிறது.