தமிழ்நாடு

பொறியியல் கல்லூரி இணைப்பு தொடர்பாக முடிவெடுக்க அண்ணா பல்கலைக்கழகத்துக்கு முழு அதிகாரம் உண்டு – சென்னை உயர்நீதிமன்றம்

பொறியியல் கல்லூரி இணைப்பு தொடர்பாக முடிவெடுக்க அண்ணா பல்கலைக்கழகத்துக்கு முழு அதிகாரம் உள்ளதென சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 2 தனியார் பொறியியல் கல்லூரிகளின் பல்கலைக்கழக இணைப்பை நிறுத்திவைத்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் 2020-21 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு அகில இந்திய தொழில்நுட்க கல்வி கவுன்சிலும் தடை விதித்தது.

இதை எதிர்த்து கல்லூரிகள் தாக்கல் செய்த வழக்கில், அண்ணா பல்கலைக்கழக உத்தரவுக்கு உயர்நீதிமன்ற தனி நீதிபதி தடை விதித்தார்.

இது தொடர்பான மேல்முறையீடு வழக்கு விசாரணையின்போது, தரமான கல்வி வழங்கும் நோக்கிலே அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறிய நீதிபதிகள், 2 கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழக இணைப்பு வழங்குவது குறித்து அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் இறுதி முடிவெடுக்க உத்தரவிட்டனர்.