இந்தியா

நாட்டு மக்களிடம் இன்று மாலை 6 மணிக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

பிரதமர் மோடி இன்று மாலை 6 மணி அளவில் தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.

ஒரு தகவலை நாட்டு மக்களுடன் பகிர்ந்து கொள்ள இருப்பதாக, இந்த உரை குறித்து டுவிட்டரில் மோடி குறிப்பிட்டுள்ளார்.

தமது உரையை கேட்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள அவர், அதே நேரம் எதைக் குறித்து பேசப்போகிறார் என்பதை வெளியிடவில்லை.

கடந்த சில மாதங்களில் பல முறை நாட்டுமக்களுக்கு உரை நிகழ்த்தியுள்ள மோடி, தேசிய ஊரடங்கு, கொரோனாவுக்கு எதிரான போராட்டம், அதை குறைக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்த அறிவிப்புகளை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.