Covid19தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று புதிதாக 3,086 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி..

தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 3,086 பேருக்கு மட்டுமே கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் புதிதாக 3,086 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 6,97,116 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று 39 பேர் (அரசு மருத்துவமனை – 21, தனியார் மருத்துவமனை – 18) கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 10,780 ஆக உயர்ந்துள்ளது.

ஒரேநாளில் 4,301 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 6,50,856 பேர் குணமடைந்துள்ளனர். 35,840 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று 81,782 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதுவரை மொத்தம் 91,93,849 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

அரசு ஆய்வகங்கள் 66, தனியார் ஆய்வகங்கள் 128 என மொத்தம் 194 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன.