Covid19இந்தியா

இந்தியாவில் புதிதாக மேலும் 54,044 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!…

இந்தியாவில் ஊரடங்குக்கு மத்தியிலும் அதிதீவிரமாக பரவிய கொரோனா வைரஸ், செப்டம்பர் மாதத்திற்கு பிறகு தற்போது படிபடியாக இறங்கு முகத்தில் உள்ளது. அதேநேரம் குணமடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று ஒரே நாளில் மேலும் 54,044 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76,51,108 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 61,775 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 67,95,103 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதித்த 7,40,090 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 717 பேர் உயிரிழந்தனர். இந்தியாவில் கொரோனாவால் இதுவரை 1,15,914 பேர் உயிரிழந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 10,83,608 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் இதுவரை 9,72,00,379 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.