அரசியல்இந்தியா

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான , எதிர்கட்சிகளின் ஆதரவுடன் பஞ்சாப் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில், இந்த தீர்மானத்தை முதலமைச்சர் அமரீந்தர் சிங் தாக்கல் செய்தார். மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து 3 புதிய மசோதாக்களையும் அவர் தாக்கல் செய்தார்.

அப்போது பேசிய அவர், விவசாயம் என்பது மாநில அதிகாரத்தின் கீழ் வரும் நிலையில், மத்திய அரசு அதை உதாசீனப்படுத்தி உள்ளது என்றார். தொடர்ந்து, விவாதம் முடிந்ததும், விவசாய மசோதாக்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.