அரசியல்தமிழ்நாடு

சிறு,குறு தொழில்துறை தொடர்பாக தமிழக முதல்வர் இன்று ஆலோசனை…

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறையில் பெறப்பட்டுள்ள முதலீடுகள் மற்றும் அதன் நிலைகள் குறித்து மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் சிறு, குறு தொழில்கள் தொடங்குவதற்கான அனுமதி எளிமையாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தொழில்துறையில் போடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து முதலமைச்சர் தலைமையில் இன்று ஆலோசனைக்கூட்டம் நடக்க உள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தொழில்துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்று , தொழில்துறை ஒப்பந்தம் போட்டுள்ள நிறுவனங்களின் நிலை, வந்துள்ள முதலீடுகள், அதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாகத் கூறப்படுகிறது .