உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 கோடியை தாண்டியது
சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன் முதலில் பரவப்பட்ட கரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதையும் உலுக்கி வருகிறது. இதில் கொரோனாவால் அதிக பதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் தொடர்ந்து இந்தியா நீடிக்கிறது.
இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 4,10,22,119 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3,06,16,552 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 11 லட்சத்து 28 ஆயிரத்து 877 பேர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பரவியவர்களில் 92 லட்சத்து 76 ஆயிரத்து 690 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 76 ஆயிரத்து 851 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.