Covid19தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,057 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3057 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 4262 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தும் 33 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று 4000-க்கும் கீழ் பதிவாகி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 3057 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7,03,250 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கொரேனாாவிலிருந்து இன்று ஒரே நாளில் 4,262 பேர் குணமடைந்துள்ள நிலையில் மொத்தமாக 6,59,432 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் இன்று 33 உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 10,858 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் சென்னையில் மீண்டும் கொரோனா தொற்று 1000-க்கும் கீழ் பதிவாகி உள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 844 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.