Covid19இந்தியா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 54366 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

உலகம் முழுவதும் காட்டு தீ போல பரவி வந்த கரோனா வைரஸ் இந்தியாவிலும் மின்னல் வேகத்தில் பரவி வந்தது. ஆனால் கரோனா தொற்று கடந்த சில வாரங்களாக சற்று குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 54366- பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 77 லட்சத்து 61 ஆயிரத்து 312-ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல், கடந்த 24 மணி நேரத்தில் 690 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 17 ஆயிரத்து 306- ஆக உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 69 லட்சம் பேர் குணம் அடைந்துள்ள நிலையில், தொற்று பாதிப்புடன் நாடு முழுவதும் 6 லட்சத்து 95 ஆயிரத்து 509 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.