குற்றம்

ராஜஸ்தானில் ஐ.பி.எல் சூதாட்டம்! போலீசாரின் அதிரடி சோதனையில் பலகோடி ரூபாய் சிக்கியது..

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை முன்வைத்து கோவில்களின் பெயரால் 30 ஆன்லைன் மற்றும் வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் சூதாட்டம் நடத்திய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 4 கோடியே 20 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 20 மொபைல் போன்கள், கணினி உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கோட்வாலி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கோடிக்கணக்கில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக தகவல் வெளியானதையடுத்து அம்மாநில போலீசார் போலீசார் அந்த வீட்டை முற்றுகையிட்டனர்.

பின் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கட்டுக்கட்டாக பணமும் மொபைல் போன்களும் கனிகளும் சிக்கின மேலும் இரண்டு பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.