இந்தியாவிளையாட்டு

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதி

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

61 வயது நிரம்பிய கபில் தேவ் இந்திய அணிக்காக 131 டெஸ்டுகள், 225 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 1994-ல் கடைசியாக விளையாடினார்என்பது குறிப்பிடத்தக்கது .

இந்நிலையில் கபில் தேவுக்கு இன்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதய ரத்தக்குழாய் அடைப்பை நீக்க ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அவருக்கு மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்திய அணியில் 1978ஆம் ஆண்டு முதல் 1994ஆம் ஆண்டு வரை விளையாடிய கபில் தேவ், 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரை இயந்தியாவுக்காக பெற்றுக்கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.