அரசியல்தமிழ்நாடு

2021 சட்டமன்ற தேர்தலுக்கு ஆயத்தப்படுத்தும் விதமாக, தெற்கு மண்டல திமுக நிர்வாகிகளோடு மு.க.ஸ்டாலின் ஆலோசனை

2021 சட்டமன்ற தேர்தலுக்கு ஆயத்தப்படுத்தும் விதமாக, தெற்கு மண்டல திமுக நிர்வாகிகளோடு அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்கள் 4 மண்டலங்களாகவும், சென்னை தனி மண்டலமாகவும் பிரிக்கப்பட்டு ஆலோசனை நடத்தப்படுகிறது. அந்த வகையில், 2-வது நாளாக, தேனாம்பேட்டையில் உள்ள கலைஞர் அரங்கில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், நெல்லை மாவட்டங்களை சேர்ந்த திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பொருளாளர் டி.ஆர்.பாலு, பொன்முடி, ராசா உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். மேலும் இக்கூட்டத்தில் தொகுதி வாரியான பிரச்சனைகளை நிர்வாகிகள் படிவத்தில் பூர்த்தி செய்து கொடுக்க வலியுறுத்தபட்டுள்ளனர்.