இரண்டு நாள் பயணமாக நாளை டார்ஜிலிங்,சிக்கிம் செல்கிறார் – மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
டார்ஜிலிங் மற்றும் சிக்கிம் பகுதிகளில் உள்ள ராணுவ தளங்களுக்கு 2 நாள் பயணமாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை செல்ல உள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தியில்,
அக்டோபர் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் டார்ஜிலிங் மற்றும் சிக்கிமில் உள்ள ராணுவ தளங்களுக்கு மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் செல்ல உள்ளார்.
பாதுகாப்புப் படை வீரர்களுடன் கலந்துரையாடிய பின்னர், அவர்களுடன் இணைந்து தசரா விழாவை கொண்டாடவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.