சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைப்பு
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப் போற்று திரைப்படத்தின் வெளியீடு, ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏர் டெக்கான்ஸ் நிறுவன தலைவர் கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம் , பல சிக்கல்களுக்கு மத்தியில் வரும் 30ம் தேதி அமேசான் பிரைமில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது ஆனால் அந்த படத்தை திரையரங்கில் தான் வெளியிட வேண்டும் என பலரும் படக்குழுவிடம் கோரிக்கை வைத்து வந்தனர் பலரிடம் இருந்து தடைகளும் எதிர்ப்புகளும் கிளம்பியது.
ஆனால் கட்டாயம் சூரரைப் போற்று படம் வரும் 30ம் தேதி அமேசான் பிரைமில் வெளியிடப்படும் என படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்றுள்ள விமானப்படை தொடர்பான காட்சிகளுக்கு உரிய ஒப்புதல் கிடைக்காததால், பட வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக சூர்யா அறிவித்துள்ளார்.