தமிழ்நாடு

வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மிதமான மழையும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த அறிவிப்பில், சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், சாகர் தீவு மற்றும் சுந்தர்பன் காடுகளுக்கு இடையே இன்று கரையை கடக்கும் என்றும், அப்போது, வடக்கு வங்க கடலில் மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அங்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.