வணிகம்

இந்திய பங்குச்சந்தை நிலவரம்…

இந்திய பங்குச்சந்தை வர்த்தகம் நேற்று சரிவுடன் தொடங்கி சரிவுடனேயே முடிந்த நிலையில், இன்று சற்று ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 215 புள்ளிகள் உயர்ந்து 40,773.85 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 1.2 சதவிகிதம் உயர்வாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 48 புள்ளிகள் உயர்ந்து 11,945.35 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.41 சதவிகிதம் உயர்வாகும்.

அதிகபட்சமாக பவர் கிரிட் 2.97 சதவிகிதமும், மாருதி சுசூகி 2.85 சதவிகிதமும் உயர்ந்துள்ளது. வர்த்தகத்தின் நேற்றைய தொடக்கத்தில் வங்கித்துறை பங்குகள் சரிவை சந்தித்த நிலையில், இன்று வர்த்தகத்தின் தொடக்கத்தில் ஏற்றம் கண்டுள்ளன.

கடந்த நான்கு நாள்களாக பங்குச்சந்தை வர்த்தகம் உயர்ந்து வந்த நிலையில் நேற்று சரிவைக் கண்டது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் வங்கித்துறை பங்குகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்ததன் எதிரொலியாக பங்குச்சந்தை சரிவை சந்தித்ததாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.