அரசியல்உலகம்

நான் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்குவேன் – ஜோ பைடன்

அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் பதவிக் காலம் முடியவுள்ள நிலையில், வரும் நவம்பர் 3-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. அதனையடுத்து, இருபெரும் கட்சிகளான குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்களான டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜோ பைடன் ஆகியோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜோ பைடன் மற்றும் ட்ரம்புக்கு இடையிலான இரண்டு கட்ட விவாதம் நிறைவடைந்துள்ளது. அப்போது பேசிய ஜோ பைடன், ‘நான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் கொரோனா தடுப்பு மருந்துக்கு பெரிய அளவில் ஆர்டர் செய்து, யாராரெல்லாம் பணம் கொடுத்து வாங்கமுடியவில்லையோ அவர்கள் அனைவருக்கும் இலவசமாக அளிப்பேன். முகமூடி அணிவதைக் கட்டாயாமாக்குவேன். கொரோனா பாதுகாப்பு உபகரணங்களின் உற்பத்தியை அதிகரிப்பேன் என்றார் .

கொரோனா தடுப்பு மருந்து தயாராவதற்கு பல மாதங்கள் தேவைப்படும். அனைவருக்கும் சமமாகவும், பொறுப்புடன் கொரோனா தடுப்பு மருந்தை வழங்கும் திறமையுள்ள அதிபர் அமெரிக்காவுக்கு தேவை’ என்றும் அவர் தெரிவித்தார்.