அரசியல்தமிழ்நாடு

7.5% இடஒதுக்கீடு விவகாரம்: ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு திமுக ஆர்ப்பாட்டம்

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க வலியுறுத்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித உள்இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே மருத்துவப்படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க கால ஆளுநர் கால அவகாசம் கோரியிருந்தார்.

இந்த நிலையில், இந்த மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வலியுறுத்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை ஆளுநர் மாளிகை முன்பு நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான திமுகவினர் கலந்துகொண்டு கண்டன பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தவிர்க்கும் வகையில் 500க்கும் அதிகமான காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்