அரசியல்தமிழ்நாடு

பெண்மையை போற்ற வேண்டுமே தவிர, தூற்றக்கூடாது – மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்

பெண்மையை போற்ற வேண்டுமே தவிர, தூற்றக்கூடாது என்று கூறியுள்ள அமைச்சர் ஜெயக்குமார், பெண்மை தொடர்பான விடுதலை சிறுத்தை கட்சிகள் தலைவர் திருமாவளவனின் கருத்துகள் கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை மீன்வளத்துறை அலுவலகத்தில் கடல் மீன்பிடி சட்ட அமலாக்க பிரிவின் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் கண்காட்சியை திறந்து வைத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், புகார்கள் அடிப்படையில்தான் திருமாவளவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பதாக தெரிவித்தார்.

மருத்துவ படிப்பு உள்ஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக அரசுக்கு நல்ல பெயர் கிடைக்கக் கூடாது என்பதற்காகதான் திமுக போராட்டம் நடத்துவதாகவும் அவர் கூறினார்.

அதிமுக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான் என்றும், இதை கூட்டணி கட்சிகளும் விரைவில் வழிமொழியும் என்றும் ஜெயக்குமார் குறிப்பிட்டார்.