தமிழ்நாடு

மருது பாண்டியர்களின் 219ஆவது நினைவு தினத்தையொட்டி, திருப்பத்தூரிலுள்ள நினைவு மண்டபத்தில் தமிழக துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மரியாதை

மருதுபாண்டியர்களின் 219ஆவது நினைவு தினத்தையொட்டி, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரிலுள்ள நினைவு மண்டபத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.

சுதந்திர போராட்டத்தின்போது வெள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்டு திருப்பத்தூரில் 1801ஆம் ஆண்டு அவர்கள் தூக்கிலிடப்பட்டனர். அங்கு அவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள நினைவு மண்டபத்தில் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஆர்.பி.உதயக்குமார், செல்லூர்ராஜூ, ஓ.எஸ்.மணியன், சி.விஜயபாஸ்கர், காமராஜ், கடம்பூர் ராஜு, பாஸ்கரன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதனிடையே, சென்னை தேனாம்பேட்டையில் அண்ணா அறிவாலயத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட மருது சகோதரர்களின் படத்திற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், பொருளாளர் டி.ஆர் பாலு உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.