சினிமா

ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் ஆலோசனை

ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் சென்னையில் நடிகர் விஜய் திடீர் ஆலோசனை மேற்கொண்டார்.

மக்கள் இயக்கம் என்ற பெயரில் செயல்பட்டு வரும் ரசிகர் மன்றத்தின் செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தென்காசி, கள்ளக்குறிச்சி மாவட்ட கிளைகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்துள்ள விஜய், அவர்களை நேற்று தனது பனையூர் இல்லத்துக்கு வரவழைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இந்த சந்திப்பின்போது மாநில மற்றும் பிற மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டுள்ளனர். அப்போது கொரோனா காலத்தில் ரசிகர் மன்றம் சார்பில் மக்களுக்கு என்ன மாதிரியான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.

மன்றத்தை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்ல என்ன நடவடிக்கை எடுத்து வருகிறீர்கள் என விஜய் கேட்டறிந்துள்ளார். மேலும் வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றி தேர்தலில் போட்டியிட நிர்வாகிகள் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.