இந்தியா

கர்நாடக மாநிலத்தின் 15 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் – வானிலை மையம்

கர்நாடக மாநிலத்தின் 15 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்கள் வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

வட கர்நாடகம், கடலோரப் பகுதிகளில் 3 மாதங்களாக பெய்து வரும் தொடர் மழையால், நெல், மக்காச் சோளம், கரும்பு, வாழை, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்கள் லட்சக்கணக்கான ஹெக்டேரில் தண்ணீரில் மூழ்கி வீணாகி உள்ளன.

கிருஷ்ணா, துங்க பத்ரா, நாராயண புரா உள்ளிட்ட நதிகளில் நீர் மட்டம் அதிகரித்து 23 மாவட்டங்களில் 500க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். இந்த நிலையில், வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயல் சின்னமாக உருவாகி உள்ளதால் தென்கனரா, வடகனரா, உடுப்பி , சிக்கமகளூரு, ஷிவ மொக்கா, குடகு, பெங்களூரு, கோலார், ராம்நகரம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் 27 ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.