Covid19உலகம்

அமெரிக்காவில் மீண்டும் கொரானா வைரஸ் பரவல் அதிகரிப்பு

அமெரிக்காவில் கடந்த சில தினங்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கடந்த சனிக்கிழமை அமெரிக்காவில் கிட்டத்தட்ட 80 ஆயிரம் பேருக்கு புதிதாகத் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு முந்தைய நாள் 84 ஆயிரம் பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மேலும் கொரோனா பெருந்தொற்று காரணமாக மருத்துவமனைகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஓஹையோ, மிச்சிகன், வடக்கு கரோலினா, பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் மாகாணங்களில் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாகத் அந்நாட்டு தகவல் தெரிவிக்கின்றன .