தமிழ்நாடு

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகக் கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சியால் அடுத்த 48 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த வெளிவந்த அறிவிப்பில், 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும், மதுரை, தேனி, உள்ளிட்ட 14 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் இடியுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தஞ்சாவூர் மாவாட்டம் பட்டுக்கோட்டை மற்றும், புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் தலா 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.