ராணுவ அதிகாரிகளின் நான்கு நாள் மாநாடு இன்று முதல் தொடங்குகிறது …
பதற்றம் நிறைந்த லடாக் எல்லை பகுதியில் பதற்றம் மற்றும் ராணுவ சீர்திருத்தம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்க, ராணுவ அதிகாரிகள் பங்கேற்கும் 4 நாள் சிறப்பு கூட்டம் இன்று தொடங்குகிறது.
டெல்லியில் ராணுவ தலைமை அலுவலகத்தில் தலைமை தளபதி எம்.எம்.நாரவானே தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் ராணுவத்தின் அனைத்து கமாண்டர்கள் மற்றும் படை தளபதிகள், உயரதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.
இரண்டாவது நாள் நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத், கடற்படை தளபதி கரம்பீர் சிங், விமானப்படை தளபதி RKS பதவுரியா ஆகியோர் உரையாற்ற உள்ளனர்.