அரசியல்தமிழ்நாடு

சோத்துப்பாறை அணையை திறந்து வைத்தார் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணையிலிருந்து முதல் போக சாகுபடிக்கு 2865 ஏக்கர் நிலங்களுக்கு 30 கன அடி தண்ணீரை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று திறந்து வைத்தார்.

1825 பழைய நன்செய் பாசன நிலங்களுக்கும், 1040 ஏக்கர் புதிய புன்செய் பாசன நிலங்கள் என மொத்தம் 2865 ஏக்கர் நிலங்களுக்கு விநாடிக்கு 30 க.அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இதன் மூலம் பெரியகுளம் வட்டத்திலுள்ள தென்கரை, லெட்சுமிபுரம், தாமரைக்குளம் பகுதிகள் பாசன வசதிகள் பெறுகின்றன. விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

நிகழ்சியில் தேனி மாவட்ட ஆட்சியர் ம.பல்லவிபல்தேவ், வருவாய் கோட்டாட்சியர் சிநேகா மற்றும் பொதுப்பணித்துறையினர் உடனிருந்தனர்.