இந்தியா

இந்திய காலாட்படை தினத்தை முன்னிட்டு தேசிய போர் நினைவிடத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் மரியாதை

இந்திய நாட்டின் காலாட்படை தினத்தையொட்டி, டெல்லியிலுள்ள தேசிய போர் நினைவிடத்தில் முப்படை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி நராவனே ஆகியோர் இன்று மரியாதை செலுத்தினர்.

1947ம் ஆண்டு அக்டோபர் 27ம் தேதி காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிக்குள் பாகிஸ்தான் ஆதரவுடன் புகுந்த பழங்குடியினருக்கு எதிராக இந்திய ராணுவத்தின் சீக்கிய பிரிவு தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டது.

சுதந்திர இந்தியாவின் முதல் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட இந்த தினம் ஆண்டுதோறும் காலாட்படை தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தேசிய போர் நினைவிடத்தில் பிபின் ராவத், நராவனே ஆகியோர் இன்று மரியாதை செலுத்தினர்.