Covid19இந்தியா

நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் நவ் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு – மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் நவம்பர் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஊரடங்கு தொடர்பாக செப்டம்பர் 30-ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டி நெறிமுறைகள் நவம்பர் 30-ஆம் தேதி வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கு இடையே மற்றும் மாநிலங்களுக்குள் போக்குவரத்திற்கு தடை இல்லை என்றும், போக்குவரத்திற்கு சிறப்பு அனுமதி ஏதும் தேவை இல்லை என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.