அரசியல்தமிழ்நாடு

அதிமுக புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமனம்

கட்சியின் நிர்வாக வசதிக்காகவும், கழகப் பணிகளை விரைவுபடுத்தும் வகையிலும், சென்னையை 6 மாவட்டங்களாகப் பிரித்து, அதற்கு மாவட்டச் செயலாளர்களை நியமித்து அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.

கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி இணைந்து இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

புதிதாக பிரிக்கப்பட்டுள்ள 6 மாவட்டங்களும், நியமிக்கப்பட்டுள்ள மாவட்டச் செயலாளர்களும்

வட சென்னை தெற்கு(மேற்கு) – தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார்

வட சென்னை தெற்கு(கிழக்கு) – நா. பாலகங்கா

தென் சென்னை வடக்கு (கிழக்கு) – ஆதிராஜாராம்

தென் சென்னை வடக்கு (மேற்கு) – தி.நகர் பி.சத்தியா

தென் சென்னை தெற்கு (கிழக்கு) – எம்.கே.அசோக்

தென் சென்னை தெற்கு (மேற்கு) – விருகை வி.என்.ரவி