தமிழ்நாடு

மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக வி.எம்.கடோச் நியமனம்!

மதுரை தோப்பூரில் ரூ.1300 கோடி மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்ட இருக்கிறது. இதற்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி நாட்டினார்.

இந்நிலையில் தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை ஜப்பான் நிறுவனம் கொடுக்கும் கடன் அளவை பொருத்தே அமையும் என மக்களவையில் ஏற்கனவே மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் தெரிவித்தார். இந்த நிலையில் மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவரை மத்திய அரசு நியமித்திருக்கிறது.

தற்போது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் தலைவராக பணியாற்றி வரும் கடோச் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். அவருடன் எம்.ஜி.ஆர்.மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக உள்ள சுதா சேஷய்யன், கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி பேராசிரியர் சண்முகம் சுப்பையா உள்ளிட்ட 14 பேர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.